திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்திற்குட்ப்பட்ட நெடுங்குணம் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. முகாமிற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் குமரவேல், ஒன்றியக் குழு துணைத் தலைவர் லட்சுமிலலிதாவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சகுந்தலாவேலாயுதம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழுத் தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்துகொண்டு பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா உட்பட 51 மனுக்கள் பெறப்பட்டு,12 பேருக்கு பட்டா மாற்றச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் சரவணன், திமுக இலக்கிய அணி மாவட்டச் செயலர் ஏழுமலை, வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, கிராம நிர்வாக அலுவலர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்