கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள கருப்பசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் அருண்குமார் வயது 27, எம்எஸ்சி பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார் அருண்குமார் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் மாணவி அருண்குமாரின் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.
அவர் பலமுறை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் மாணவி பேச மறுத்துவிட்டார். இதனால் அருண்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இவர் தனது பெற்றோரிடம் அந்த பகுதியில் உள்ள நண்பர்களைப் பார்க்கச் செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் சிறுவாணி ரோட்டில் உள்ள மைதானத்திற்கு சென்று அருண்குமார் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷத்தை குடித்த சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்குப் போராடிய அருண்குமாரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.