கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆதித்யன் ( வயது 32) எம்.பி.ஏ. பட்டதாரி.இவர் சிறு தொழில் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மேலும் அவர் தனக்கு தெரிந்த இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விளம்பரபடுத்தியதாகவும், கூறப்படுகிறது . இதை நம்பிய இளைஞர்கள் பலர் அவரிடம் சென்று தங்களுக்கு இங்கிலாந்து|நிறுவனத்தில் வேலை வாங்கித் தரும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து ஆதித்தியன் அவர்களிடம் விசா, போக்குவரத்து செலவு, தங்குமிடம் ஆகியவற்றுக்காகரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய கோவை ஐ.டி. ஊழியர்களின் கார்த்திக் ( வயது 26) பிரபாகரன் (வயது 27) ஆகியோர் மொத்தம் ரூ 38 லட்சத்தை ஆதித்யனிடம் வழங்கியுள்ளனர் .இந்த நிலையில் ஆதித்யன் அவர்களிடம் கூறியது போல் வெளிநாட்டில்வேலை வாங்கித் கொடுக்க வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐ.டி. ஊழியர்கள் இருவரும் தங்களது பணத்தை திருப்பிக் கேட்டனர். அவர் பணத்தை தராமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர் .. போலீஸ் விசாரணையில் ஆதித்யன் இதுபோன்று பல இளைஞர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆதித்யனை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.