நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம்நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத்தாண்டகுப்பம் ராஜா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் கோபி (வயது 33) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார் இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்கின்ற மனைவியும் ஹேமலதா ,யுவராஜ், ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர் இந்நிலையில் கோபி தனது மொபட்டில் நேற்று இரவு கிருஷ்ணகிரி வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மல்லப்பள்ளி கிராமம் கொய்யாகாமேடு முருகன் வீட்டின் அருகில் சென்று கொண்டு இருக்கும் போது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது.

இதனால் கோபிக்கு தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த  லாசர் மகன் சுரேந்தர் குமார் கார் டிரைவரிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.