விழுப்புரம்: மாவட்ட காவல்துறை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (20.03.2022) மாலை ஆய்வாளர் திரு. செல்வராஜ், காவலர்கள் கந்தன், சீனிவாசராஜா, ராமச்சந்திரன் மற்றும் அருளரசன் ஆகியோரின் தலைமையில் வாகன தணிக்கையின் போது பாண்டிச்சேரியைச் சேர்ந்த இருவரிடம் இருந்து 800g கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்கண்ட ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி கொடுத்தும் சிறப்பாக பணியார்ரியமைக்கு பாராட்டினார்.