சென்னை: நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
நீலத் திமிங்கல விளையாட்டு மூலமாக பிறரை தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம். நீலத் திமிங்கல விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் தண்டனை.
சிறார் எவராவது நீலத் திமிங்கலம் விளையாடுவது தெரியவந்தால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். நீலத் திமிங்கல விளையாட்டு விளையாடும் மாணவர்களின் மனநிலையில் ஏதாவது வித்தியாசமான மாற்றம் தெரிகிறதா என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்.