தென்காசி: புளியங்குடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் 1 டன் புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 1.200 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை அளிப்பதற்காக புளியங்குடி காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்கள் சிவகிரி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி இன்று புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கணேஷ் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுவான இரண்டு நபர்களின் முன்னிலையில் 1.200 கிலோ கிராம் புகையிலைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.