திருவள்ளூர்: பொன்னேரியில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1,2, ஆகிய நீதிமன்றங்களில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வசுந்தரி ஆய்வு செய்தார். அப்போது ஆண்டறிக்கை, லோக் அதாலத் மூலம் தீர்வு, விபத்து வழக்கு, உள்ளிட்டவைகளை கேட்டறிந்த நீதிபதி திடீரென பொன்னேரி கிளைச் சிறையில் ஆய்வு செய்து 125 க்கும் மேற்பட்ட கைதிகளிடம் உணவு, அடிப்படை வசதிகள் இலவச சட்ட ஆலோசனை உதவிகள் குறித்து கேட்டறிந்தார் இதில் முதன்மை நீதி துறை நடுவர் மாவட்டஇலவச சட்ட உதவி மைய செயலாளர் பொன்னேரி நீதி துறை நடுவர், வழக்கறிஞர்கள் மற்றும் பொன்னேரி சிறைத்துறை அதிகாரி சுயம்புலிங்கம் காவலர்கள் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்