அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில், திடீர்குப்பத்தில் உள்ள சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் இளையராஜா, என்ற ராக்கெட் ராஜா(35), இவர் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இதேபோல் சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(45), இவர் தமிழர் நீதிக் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இளையராஜா மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிக்கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இருவரும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில், தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் உதவி ஆய்வாளர் திருமதி. லட்சுமி பிரியா, வழக்குப்பதிந்து இளையராஜா, பாக்யராஜ் ஆகியோரை கைது செய்தார்.