திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வாகன விபத்தில் உயிர்நீத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. சித்திக் அவர்கள் மற்றும் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல்நிலை சரியில்லாமல் உயிர்நீத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மாணிக்கம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நிவாரண நிதி திரட்டினார்கள். இன்று (04.04.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உயிர்நீத்த இரண்டு காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2,00,000/- நிவாரணத் தொகையை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா