ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்D.R. தீபா சத்தியன் இ.க .ப. அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொழிற் சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுவதோடு புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்பான தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க அனைத்து தொழிற்சாலை பிரதிநிதிகள் இடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது இக்கூட்டத்தில் முத்துகருப்பன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் குற்றப்பிரிவு ராணிப்பேட்டை பிரபு துணை காவல் கண்காணிப்பாளர் ராணிப்பேட்டை கோட்டம் மற்றும் திரு. புகழேந்தி கணேஷ் துணை காவல் கண்காணிப்பாளர் அரக்கோணம் உட்கோட்ட மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்