கோவை : சேலம் அருகேயுள்ள மல்லுாரைச், சேர்ந்தவர் மாணிக்கம், (72), பாவை அம்மன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலாளராக அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், (62), எழுத்தராக சாந்தி, (55), பணியாற்றி வந்தனர். அதிக வட்டி தருவதாக விளம்பரப்படுத்தியதால், பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தராமல், மோசடி செய்ததால் புகார் அளிக்கப்பட்டது.
சேலம் பொருளாதார குற்றப்பிரிவு, காவல் துறையினர் , விசாரித்தபோது, 28 பேரிடம், இவர்கள், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. இது தொடர்பாக மூவரையும் 2012, மார்ச் 28ல் கைது செய்து, கோவை ‘டான்பிட்’ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் முருகேசனுக்கு, 10 ஆண்டு சிறை, 1.96 கோடி லட்சம், ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.