கோவை : நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டை சேர்ந்தவர் பிரகாஷ்வரன் (42), நிதிநிறுவன அதிபர். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரகாஷ்வரன் தற்போது காரமடை வி.வி.கார்டனில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வந்த இளம்பெண்ணுடன் பிரகாஷ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து அந்த இளம்பெண்ணை பிரகாஷ்வரன் முதல் மனைவிக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு பிரகாஷ்வரன் 2-வது மனைவியின் வீட்டிற்கு அவ்வபோது வந்து செல்வது வழக்கம். அப்போது, வீட்டில் தனியாக இருந்த 2-வது மனைவியின் மகளான 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தும் வைத்திருந்ததாக தெரிகிறது. பிரகாஷ்வரன் இந்த வீடியோ பதிவை அவ்வபோது பார்த்து ரசித்து வந்தாக தெரிகிறது. இதனால் பிரகாஷ்வரனின் நடத்தையில் சந்தேகப்பட்ட முதல் மனைவி சம்பவத்தன்று அவரது செல்போனை எடுத்து பார்த்தார்.
அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்த தனது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது தான், தனது கணவர் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தும் தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ்வரனின் முதல் மனைவி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர், , வழக்குப்பதிவு செய்து, பிரகாஷ்வரனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நிதிநிறுவன அதிபர் தனது 2-வது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாக எடுத்து ரசித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.