திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துதூர் வட்டம், பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை வ/37, த/பெ அண்ணாமலை என்பவர் தனது வீட்டின் பின்புறத்திலும் மற்றும் கீழ்பெண்ணாத்துதூர் வட்டம், வழுதாலங்குலம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் வ/37, த/பெ துரைசாமி என்பவர் சமத்துவபுரம் கிராமத்திலும் கல்லச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலா அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜான்பாஷா, வ/26, த/பெ சோட்டாபாய் மற்றும் இவரது சகோதரர் முன்னாகான் வ/28, த/பெ சோட்டாபாய் என்கிற இருவரும் வந்தவாசி மும்முனி பைபாஸ் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, வந்தவாசி வட்ட காவல் ஆய்வாளர் திரு.R.குமார் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப.,அவர்கள்மாவட்டஆட்சியருக்குபரிந்துரைசெய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா. முருகேஷ் ,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட 4 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்