தென்காசி: ஆழ்வார்குறிச்சியில் வீட்டினுள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் அதிரடி கைது
தென்காசி மாவட்டம்,ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூர்,மேல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் செல்லப்பா(62) என்பவர் தன் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியூர் சென்றிருந்த போது, அவரது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள், பணம் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு ஆகியோர்களின் உத்தரவின்படி, கடையம் சரக காவல் ஆய்வாளர்.
திரு.ரகுராஜன், ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துகிருஷ்ணன், திரு.பரமசிவம், திரு. முருகன் ( தனிப்பிரிவு ),திரு தனுஷ்கோடி த.கா மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் திரு.சமுத்திரக்கனி, திரு.குமரேச சீனிவாசன்,முதல்நிலை காவலர்கள் திரு. முஸ்தபா,திரு. சௌந்தரபாண்டியன், தென்காசி சைபர் கிரைம் காவலர்கள் திரு.மனோஜ் மற்றும் திரு.ஜேசு ஆகியோரின் தீவிர விசாரணையில், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கீழஆம்பூர் மேல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் செல்வராஜ்(44) ,சுப்பையா என்பவரது மகன் சங்கர்(37), பச்சியா என்பவரது மகன் முரசொலி செல்வம் @ சமையல் செல்வம்(36) மற்றும் கீழஆம்பூர் பாபநாசம் மெயின்ரோடு, ராமசாமி என்பவரது மகன் தங்கமணி(42) ஆகியோர் மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் மேற்கொண்டதில் மேற்படி குற்றச் சம்பவத்தினை செய்ததை ஒப்புக் கொண்டதின் பேரில் வழக்கின் சொத்துக்களான, தங்க நகைகள்- 22 பவுன், வெள்ளிகொடி சுமார்- 100 கிராம் மற்றும் பணம் ரூபாய்- 15,000/- ஆகியவை மீட்கப்பட்டு, மேற்படி குற்றவாளிகள் இன்று 16/03/2022 அன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.