மதுரை: வீட்டுகளை உடைத்து திருடிய நான்கு குற்றவாளிகள் கைது. சுமார் ரூ.35,00,000/- லட்சம் மதிப்புள்ள 92-பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.50,000/- பறிமுதல் திருப்பாலை, தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், தெப்பக்குளம், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி காவல் துணை ஆணையர்(வடக்கு) திரு.ராஜசேகரன் அவர்களின் நேரடிப்பார்வையில் தல்லாகுளம் சரக காவல் உதவி ஆணையர்
அவர்களின் தலைமையின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தபோது தெப்பக்குளம் டீச்சர்ஸ் காலணியைச் சேர்ந்த T.J.விஷ்ணுகுமார், அவரது சகோதரர் T.J.வினோத்குமார் மற்றும் அவர்களுக்கு உடைந்தையாக இருந்த ராமச்சந்திரன், தினேஷ் (எ) பூ ஆகியோர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
எனவே எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து வீடுகளின் கதவுகளை உடைக்க பயன்படுத்தும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் நாள்வரிடமும் விசாரணை செய்த போது மதுரை மாநகரில் 15 கன்னக்களவுகளையும், 2
கொள்ளை வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.35-லட்சம் மதிப்பிலான 92-பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.52,500/- கைப்பற்றப்பட்டது. மேலும், குற்ற வழக்குகளில் CCTV பதிவுகள் எதிரிகளை அடையாளம் காண மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவே பொதுமக்கள் வசிப்பிடம் மற்றும் வணிக வளாகங்களில் CCTV கேமராக்களை பொருத்தி சமூக விரோதிகளின் செயல்களை அடையாளம் காண உதவுமாறு காவல் ஆணையர் திரு.செந்தில்குமார் IPS., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி