திருச்சி : திருச்சி, புத்துார் பகுதியை சேர்ந்தவர் திலீபன், (34), ஒரு சமுதாய சங்கத்தின், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலராக உள்ளார்.கடந்த 13ம் தேதி இரவு, திருச்சியில், இருந்து, லால்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அகிலாண்டபுரம் அருகே, ஏழு பேர் கொண்ட கும்பல், திலீபன் ஓட்டிச் சென்ற கார் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்கியது. சுதாரித்த திலீபன், காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, சமயபுரம்காவல் துறையில், தஞ்சமடைந்தார். அவர் அளித்த புகார்படி, சமயபுரம் காவல் துறையினர், மற்றொரு சமுதாய சங்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிந்தனர்.பின், அகிலாண்டபுரம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.