சிவகங்கை: தேவகோட்டை நகரில் ஸ்டுடியோ உடற்பயிற்சி நிலையத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திறந்து வைத்து துவக்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் சாய் ப்ரோ குழுமத்தின் சார்பில் மேக்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோ என்ற பிரம்மாண்டமான உடற்பயிற்சி கூடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திறந்து துவக்கி வைத்து பேசுகையில் தேவகோட்டை மாவட்டத்தின் தலைநகர் இல்லை ஆனால் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகராட்சிகளில் இருக்கும் வசதிகள் இந் நகரில் வந்து கொண்டு இருக்கிறது.
மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற பிரம்மாண்டமான நவீன உபகரணங்களை கொண்டு இந்த உடற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தில் பெரும் வளர்ச்சி அடைந்த இக்கால கட்டத்திற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது என்றும் எண்ணங்களை நல்லவையாக ஆக்கிக்கொண்டால் நமது வாழ்க்கையும் எண்ணம் போல்வாழ்க்கையாக அமையும் என்றும் நல்லசிந்தனை யாளர்களோடு பழகி நல்ல சிந்தனைகளை வளர்த்து நாட்டுக்கு சேவை செய்யும் மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில் நாம் வாழ்வது பெருமை கொள்ள வேண்டும்.எரிகிற தீபம்தான் மற்றோரு தீபத்தை ஏற்ற முடியும்
எந்தவொரு வேர்வைக்கும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உயர்ந்த இடத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது சின்ன சின்ன இடையூறுக்கு இடம் கொடுக்க கூடாது. வாய்ப்பு கிடைக்கும் என்று இருக்காதே கிடைக்கும் வாய்ப்பில் வாழ்வை உயர்த்த வேண்டும். இசைகள் கேட்கும் போது உடனடியாக நமக்கு உற்ச்சாகத்தை கொடுக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களிடம் கலந்துரையாடல் செய்யுங்கள் உங்கள் வாழ்வு உயரும். வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நான் படித்த 3000 புத்தகங்கள் இன்றும் என்னிடம் உள்ளது. தோல்வி என்ற காயத்திற்கு மருந்து வெற்றி தான் என்றும் கூறினார்.
இளைஞர்களுக்கான அனைத்து உடற்பயிற்சி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்த மிகவும் குறைந்த கட்டணமே நினைக்க பட்டுள்ளதாக இதன் நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹாய் ப்ரோ குடும்பத்தின் தலைவர் சார்லஸ், நிர்வாக இயக்குனர்கள் இளையராஜா, முத்துகுமார். கார்த்திகேயன், ஸ்டீபன், குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்