சென்னை: புழல் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.6133/- அடங்கிய பையை நேர்மையாக புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் நசீர் என்பவரை , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.Commissioner of Police appreciated and commended an auto driver Nazir who found a bag containing Rs.6,133/-, lying unattended on the road and honestly handed it over to Puzhal PS.சென்னை, கொளத்தூர், பூம்புகார் நகர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் நசீர் (வ/44) என்பவர் கடந்த 10.03.2022 அன்று இரவு 9.30 மணியளவில் தனது ஆட்டோவில் புழல் கதிர்வேடு பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவிற்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் பை, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி சாலையில் விழுந்துள்ளது.
இதனை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சாலையில் கிடந்த பையை எடுத்து, நேர்மையாக புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். புழல் காவல் நிலைய போலீசார் பையை சோதனை செய்த போது, அதில் பணம் ரூ.6,133/- 2 சுத்தியல்கள், 1 ஸ்குரு டிரைவர் இருந்தது தெரியவந்தது. மேலும் பையை தவறவிட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சாலையில் கிடந்த ரொக்கம் ரூ.6,133/- அடங்கிய பணப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் திரு.நசீர் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (12.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.