சென்னை : ஆவடி அடுத்த பட்டாபிராம், ஸ்ரீநாத் நகர், நான்காவது பிரதான சாலையில், வசிப்பவர் சவுந்தரராஜன், (37), இவர் நேற்று முன்தினம், அதே தெருவிலுள்ள வேறு வீட்டிற்கு குடி போக பால் காய்ச்ச சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த அரை சவரன் நகை, நான்கு ஜோடி கொலுசு, ஒரு ஜோடி வெள்ளி குத்து விளக்கு மற்றும் 13, ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரிந்தது. புகாரின்படி, பட்டாபிராம் காவல் துறையினர், வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.