கரூர் : தேனி, மார்ச். 5 போடியில் சுகாதார பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.போடி நகராட்சி பேருந்து நிலையத்தில் சுகாதாரம் மிக மோசமாக உள்ளதாக, கிடைத்த புகாரை அடுத்து புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக சேர்மன் இராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் சுகாதார பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அவர்களிடம் போடி நகராட்சியில் நடைபெற்று வரும்சுகாதார பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சங்கர் உடன் இருந்தார். அப்போது பேரூந்து நிலையத்தை மிக தூய்மையாக வைத்திடுமாறும், தினமும் பணிகளை செய்திடுமாறும் கேட்டு கொண்டார்.