கோவை : .கோவை, பிரஸ்காலனி, சி.எஸ்.ஐ., நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ், (43), சொந்தமாக தொழில் செய்து வருகிறார். பெரியநாயக்கன்பாளையம், கூடலுார் கிராமத்தில், 13.36 சென்ட் நிலம் வாங்கினார். இன்பராஜ், வங்கியில், 42 லட்சத்துக்கு, அடகு வைத்தாக கூறப்படுகிறது. அவரால் கடனை திருப்பி செலுத்த முடியாததால், 2020 பிப்., மாதம் சொத்துக்களை, வங்கி பறிமுதல் செய்தது. சொத்தில், பிரின்ஸ் ராஜிக்கும் பங்குண்டு. சொத்து பறிமுதல் செய்யப்பட்டதை , எதிர்த்து, கடன் மீட்பு தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.), மற்றும் கூடுதல் துணை நீதிபதி நீதிமன்றத்தில், ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சாய்பாபா காலனியில் உள்ள தனியார் கிச்சன், இன்டீரியர் டிசைன்ஸ் நிறுவனத்தின், தலைமை விற்பனை அதிகாரியான கவுண்டம்பாளையம், சேரன் நகர் சுமதி (44), நிர்வாக இயக்குனர் கல்பனா (42), ஆகியோர், குட்டி என்பவர் வாயிலாக, இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்து, பிரின்ஸ்ராஜை , அணுகினர்.அவர்கள், சொத்துக்களை மீட்டுத்தருவதாகவும், பறிமுதல் செய்த வங்கியில், இருந்து, 3 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும், உத்தரவை ரத்து செய்ய, ரூபாய், 60 லட்சம் தரும்படியும் கேட்டுள்ளனர். பிரின்ஸ் ராஜ் அவர்களிடம், 38.50 லட்சம் ரூபாயை பல்வேறு தவணைகளில், கொடுத்தார். பின் அவர்கள் மோசடி நபர்கள், என்று தெரியவந்ததால், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில், புகார் அளித்தார். சுமதி, கல்பனா, ஆகியோர் மீது மோசடி, மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த காவல் துறையினர் , இருவரையும் கைது செய்தனர்.