கரூர் : குளித்தலை அடுத்த, சிந்தலவாடி பஞ் புனவாசிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மோகன்ராஜ், (32), அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன், (55), கூலி தொழிலாளி. இவர் கடந்த, 21ம் தேதி, மோகன்ராஜை, தகாத வார்த்தைகள் பேசி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். காயமடைந்த மோகன்ராஜ் குளித்தலை அரசு மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவர் கொடுத்த புகாரின்படி, லாலா பேட்டை காவல் துறையினர், சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.