கோவை : கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள பொகளூர், தாளத் துறையைச் சேர்ந்த ரமேஷ் குமார் (31), கூலி தொழிலாளி இவரது ‘ தாய் மாமா ஆறுமுகம் , மற்றும் உறவினர்கள் ஜெயராஜ், சுப்பிரமணி , சுரந்திரன்ஆகியோர் நேற்று வெள்ளிக்குப்பம், பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, மது அருந்த சென்றனர். அவர்கள் அனைவரும் பாரில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பாரில் பணிபுரியும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பக்கம் உள்ள பணிக்கர்குளத்தை, சேர்ந்த மணிகண்டன் (22), என்பவருடன் குடிபோதையில், தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார் ஊழியர் மணிகண்டன், ரமேசை தாக்கி கிழே பிடித்து தள்ளினார்., இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார், அவரை சிகிச்சைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், இதுபற்றி சிறுமுகை காவல் துறையில், புகார் செய்யப்பட்டது, காவல் ஆய்வாளர் திருமதி. உதயரேகா, வழக்குப்பதிவு செய்துபார் ஊழியர் மணிகண்டனை கைது செய்ததார். டாஸ்மாக் கடையில் தொழிலாளி, அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.