காரைக்கால் : காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (50), கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். 2020-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் நெடுங்காடு காவல் துறையில் , புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில், நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி. அல்லி, குற்றம்சாட்டப்பட்ட ஜெயராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.