வேலுார் : வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே பூசாரி வலைசையை சேர்ந்தவர் முனிராஜ், (50), கட்டட தொழிலாளி, இவர் தாய் இந்திராணி, (70), சகோதரி சின்னம்மாள், (42), இவர்கள் பெயரில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதை தன் பெயரில், எழுதி வைக்க, முனிராஜ் வற்புறுத்தி வந்துள்ளார். குடிப்பழக்கமுள்ள முனிராஜிக்கு சொத்தை எழுதி வைக்க அவர்கள் மறுத்து விட்டனர். ஆத்திரமடைந்த முனிராஜ், 2020 ஜூன், 10ல் தலையில் கல்லை போட்டு தாய் இந்திராணியையும், கட்டையால் தாக்கி சகோதரி சின்னம்மாவையும், கொலை செய்தார்.
பரதராமி காவல் துறையினர், முனிராஜை கைது செய்தனர். இந்த வழக்கு வேலுார் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, கொலையாளி முனிராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, வேலுார் மத்திய ஆண்கள் சிறையில், முனிராஜ் அடைக்கப்பட்டார்.