திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(40)என்ற மனைவியும் கதிர்வேல்(22)என்ற மகனும் 17வயது மகளும் உள்ளனர். மகள் அரவக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பாலசுப்ரமணி மகள். குளிப்பட்டி திமுக வடக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் தங்கராஜின் மகன் விமல்ராஜ் பாலசுப்ரமணியின் மகளும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். அவரது தந்தைக்கு இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து குளிப்பட்டியில் உள்ள விமல்ராஜ் வீட்டிற்குச் சென்று இனிமேல் எனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்த பாலசுப்ரமணியம் அவர்களுடன் பேசக்கூடாது என்று செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார் காதலியிடம் பேச முடியாமல் ஆத்திரமடைந்த விமல்ராஜ் தனது நண்பர்களான சரவணனிடம்(21) ஆலோசனை கேட்டதின் பெயரில் சரவணனின் நெருங்கிய நண்பரான அஜித் என்பவரை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை கூறியபோது அஜித் கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளார் . சம்பவம் செய்யும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்றும் கைரேகைகளை கொலை செய்துவிட்டு அளிப்பதற்காக பெட்ரோல் பயன்படுத்தினால் கைரேகை தெரியாது என்றும் நூதனமான திட்டங்களை தீட்டி கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்வதற்காக இரவு நேரத்தில் சினிமாவிற்க்கு சென்று அஜித் தப்பித்துக்கொள்ள முயற்சி த்துள்ளார் .
இத்திட்டத்தை கைவிடாமல் விமல்ராஜ் சரவணனும் ஒன்று சேர்ந்து நத்தபட்டி அருகே சுப்பிரமணியின் தோட்டத்திற்கு இரவு நேரத்தில் நோட்டமிட ஆரம்பித்தார். பாலசுப்ரமணி இரவு சுமார் 12 மணிக்கு பாலசுப்ரமணி வருவதை கவணித்த விமல்ராஜ் சரவணனும் கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை எடுத்து பாலசுப்ரமணியின் முகத்தில் தூவி விட்டு மறைந்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதில் நிலைதடுமாறி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் .தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் குற்றவாளிகளான விமல்ராஜ் ,சரவணன், அஜித்தை கைது செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.