தாங்க முடியாத பணிச்சுமை.. மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் ‘துப்பாக்கியால் சுட்டு தற்கொலை’ இப்போ தான் போலிசுக்கு எதுக்கு துப்பாக்கி கொடுத்துருக்காங்கன்னு தெரியுது.எதிரிகளை சுட அல்ல.’நாங்கள் கொடுக்கும் அதிக பணிசுமையை தாங்க முடியா விட்டால் நீயே சுட்டு இறந்து விடு’ என்பதற்காக தானோ!
அதிக நேரம் பணி, குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் யார் என்றால் அவர்கள் தான் ‘தமிழக கொத்தடிமை காவலர்கள்’.
மற்ற அரசு, தனியார் பணியாளர்கள் கூட வாரத்தில் சில நாட்களையும், வருடத்தில் சில பண்டிகைகளையும் குடும்பத்துடன் கழிக்க முடிகிறது..
ஆனால் எங்களுக்கோ அந்த பண்டிகை தினத்தில் தான் அதிக பணி,ஏன் எங்களுக்கு குடும்பங்கள் இல்லையா…?
இதை சற்று கவனியுங்கள்:
கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பணப்பிரச்சனையால் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஏழு நாள் பணி புரிய (பகல் மட்டும் தான்) உத்தரவிட பட்டது..
ஆனால் அதை எதிர்த்த போது நீதிமன்றம் கூட’ அவர்கள் மனிதர்கள் தானே எப்படி தொடர்ச்சியாக பணிபுரிய முடியும் என கூறியது’
ஆனால் காவல்துறை ஓய்வில்லாமல் பணியாற்றுவது அவர்கள் கண்ணுக்கு தெரியாது.சங்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவை கூட தள்ளுபடி செய்தது. அவர்களை மனிதர்கள் தானே என கேட்டீர்களே.ஏன் நாங்கள் மனிதர்கள் இல்லையா?
கடந்த மாதம் முதல்வர் மரணத்தில் கூட மற்ற அனைவருக்கும் 5 நாட்கள் விடுமுறை.ஆனால் காவல்துறை நிலைமை, 1 வாரமாக உணவு கூட இல்லாமல் தெருவினில்..
இதே நிலைமை தொடர்ந்தால், இது போல இன்னும் பல காவலர்களை இழக்கத் தான் நேரிடும்.
மற்ற அரசு பணியாளருக்கு வழங்கப்கடும் சலுகைகளில் பாதியாவது கிடைத்தால் கூட சந்தோஷபடுவோம் நாங்கள்.ஆனால் எங்களை தமிழக அரசோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதே இல்லை.
இப்படி எங்களுக்குள்ளே மட்டுமே புலம்ப முடிகிறது.வேறு மேல் முறையீடு செய்ய முடியவில்லை.காரணம் ‘சங்கம் இல்லாத ஒரே கொத்தடிமைகள்’ நாங்கள் தானே! இப்போது கிடைத்த ஓய்வு நேரம் கூட நான் புலம்பி தீர்க்கவே தீர்ந்து விட்டது. தயவு செய்து இதை முடிந்த அளவு பகிருங்கள்..
முக்கியமாக சம்மந்தபட்ட அமைச்சர்கள், அரசியில்வாதிகளுக்கு சென்று சேரும் படி பகிரவும்.அப்போதாவது உங்கள் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல விடிவு பிறக்கட்டும்..!