மதுரை : தேவகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள தனியார் பெண்கள்மேல்நிலைப் பள்ளி எதிரே பிரகதீஸ்வரன் கடை நடத்தி வருகிறார். இக்கடையில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பிடிபட்டு கோர்ட்டில் அபராதம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும்விற்கப்படுவதாக தகவல்வந்ததை அடுத்து காவல் துறையினருடன், வட்டாரஉணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் சம்பந்தப்பட்ட கடை ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததைகண்டு பிடித்தனர். குட்காவை பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.வேலாயுதம் பட்டினத்தில், தியாகராஜன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில், குட்கா விற்பதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் ஆய்வு செய்து ரூ.3 ஆயிரம்மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி