நாம் அன்றாடம் உண்ணும், உணவுகளில் ஒரு சில உணவுகளை, வேறொரு உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால், பல மடங்கு அதன் நன்மைகள் ஏற்படுகின்றது. அந்தவகையில் நாம் தினமும், சமையலுக்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு, பல்வேறு வகையில் நமது ஆரோக்கியத்திற்கு, உதவி புரிகின்றது. அது போன்றும், ”தேன் நமது உடல் ஆரோக்கியத்திற்கு, அழகிற்கும் சிறந்த பயன் அளிக்கின்றது” தேனும் தேங்காய் எண்ணெய்யும், மிக சிறந்த கலவையாக உள்ளது. இந்த கலவை உச்சம் தலை, உள்ளங்கால் வரை, உள்ள எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது.
சுவாச கோளாறுகளுக்கு : தேன் 1/4 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், எலுமிச்சை 2 ஸ்பூன், மூன்றையும் வெது வெதுப்பான நீர் 1 கப்பில் 3 முதல் 5 நிமிடம் மிதமான சூட்டில், சூடு செய்து கொண்டு, இந்த கலவையை வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடவும். இந்த வைத்தியம் உங்களின் , எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாச பிரச்சினைகளில் இருந்து முழுமையாக காத்து கொள்ளும்.
மன நிம்மதிக்கு : முதலில் தேங்காய் எண்ணெய்யையும், தேனையும் நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். மனநிலையை அமைதியாக வைத்து, ஆழ்ந்த உறக்கத்தை தரவல்லது.
முடி பிரச்சினைகளுக்கு : தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை, முதலில் நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இதனை தலையில் தடவவும். இவ்வாறு தடவும் போது உடைந்த முடி, அல்லது அதிக வறட்சி கொண்டு பகுதியில் தடவவும். இது சிறந்த கண்டிஷனர் போன்று செயல்படும்.
சுறுசுறுப்பாகவும் இருக்க : முதலில் அவகேடோ பழம், இளநீர், தேங்காய் எண்ணெய், தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் பெரிஸ், சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், தாதுக்கள் தான் , உங்களின் உடலை அத்தியாகி ஆற்றலுடன், வைத்து கொள்ள உதவி புரிகின்றது.
சரும பிரச்சினைகளுக்கு : 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன், 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில், தடவி மசாஜ் செய்து பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை, வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதனால் முகப்பருக்கள், அரிப்புகள், முகத்தின் அழுக்குகள், வறட்சி போன்றவை நீங்கி விடும்.