திண்டுக்கல்: இரவு நேரங்களில் விபத்துகளை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி ஓய்வு எடுத்து செல்லுமாறு அறிவுரை கூறி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 04.04.2022 திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் காவல் நிலைய எ ல்லைக்குட்பட்ட பொருளூர் பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கள்ளிமந்தையம் நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கரிகாலன் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.செந்தில் ஆகிய இருவரும் தூக்கத்தினால் ஏற்படும் வாகன விபத்தை தடுப்பதற்காக வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுமாறு அறிவுரை கூறி வருகிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா