கோவை: காட்டூர் காவல்நிலைய குற்ற எண் 458/21 u/s 302 IPC வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், காய்தே மில்லத் புதுவீதியில் வசித்து வந்தவர் த் ேஷக்அப்துல்லா,36. இவரும், திருச்சி,புங்கனுாரை சேர்ந்த தங்கப்பன்.58, என்பவரும் கோவையில் ஒன்றாக தங்கி கட்டட வேலைக்கு சென்றனர். காந்திபுரம், 9 வது தெருவில் வேலை செய்த போது, தங்கப்பன் மொபைல் போனை, ேஷக்அப்துல்லா உடைத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் முன் விரோதம் ஏற்பட்டு, 18–9–2021 அன்று மாலையில், ேஷக் அப்துல்லாவை கத்தியால் குத்தி தங்கப்பன் கொலை செய்தார். காட்டூர் போலீசார், தங்கப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்கப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு, அவர்கள் இன்று தீர்ப்பு அளித்தார். இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு கார்த்திகேயன் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் திருமதி லதா அவர்கள் புலன் விசாரணை அதிகாரி எதிரியை கைதி வழி காவல் மூலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.