விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில், நகரங்களில், தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக தீவிர துப்பரவு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பேரூராட்சி சேர்மன் திரு. செந்தில், மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். முகாமில், பேரூராட்சியில், மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் பொதுமக்களுக்கு பேரூராட்சித் தலைவர் திரு. ஆர் .கே. செந்தில், பரிசுகள் வழங்கினார். இந்
நிகழ்ச்சியில் ,செயல் அலுவலர் திரு. ரவிக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் திரு. லியாகத் அலி, திரு. செல்வராஜ், திரு. முகமது முஸ்தபா, திரு. தீபா பாண்டியராஜன், திரு. முத்துக்குமார், எஸ்.பி.எம், டிரஸ்ட் நிறுவனர் திரு. அழகர்சாமி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் திரு. சிவக்குமார், இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் திரு. விஜயகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி