தூத்துக்குடி : தூத்துக்குடியில் வாகன விபத்துக்கள், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவிடி சிக்னல், முதல் பழைய துறைமுகம் வரை உள்ள சாலைகளில் 58 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி மத்திய பாகம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன், தலைமை வகித்து சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாற்றத்தை தேடி என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்தும் அதை தவிர்ப்பது குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சிசிடிவி கேமராக்கள் காவல்துறையின் மூன்றாவது கண்ணாக இந்த சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகிறது தற்போது தூத்துக்குடி மாநகரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் சிசிடிவி பொருத்தப்படும் பணி நடைபெறும் எனவும் மேலும் கடந்த 4 மாதத்தில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என தெரிவித்த அவர் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது போதை வஸ்துகள் விற்பனை செய்யும் கடைகள் சீல் வைக்கப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் விற்பனை என்பது குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி திரு. கணேஷ், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் திரு. ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.