தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட பகுதிகளில் 17.08.2019 அன்று பேருந்து காவலர் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஏற்படுத்தினர்.
பேருந்து காவலர் திட்டம் என்பது பேருந்துகளில் சாதிய வாசகங்கள் எழுதுவது, பேருந்துகளை சேதப்படுத்துவது, பெண்களை கேலி செய்வது, தவிர்க்கும் வகையில் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதற்காக ஏற்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தினை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இவ் விழிப்புணர்வு சம்பந்தமான ஸ்டிக்கர்களை பேருந்துகள் மற்றும் பள்ளிகளில் ஒட்டி சாதிய மோதல்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.