தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம், காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கணேசன், மற்றும்காவல்துறையினர், நேற்று (03.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, விளாத்திகுளம் சாலயம், தெரு அருகே சந்தேகத்திற்க்கிடமான, முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், மகன் முருகன் (33), என்பதும் அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த, ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது ,தெரியவந்தது. உடனே மேற்படி காவல்துறையினர், எதிரி முருகன், என்பவரை கைது செய்தனர்.















