திருச்சி: திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ரெங்காநகரைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் சொந்தமாக சுற்றுலா வேன் ஓட்டி வருகிறார். கடந்த 02.02.22-ஆம் தேதி திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் ஓட்டுநர் சங்க வேன் நிறுத்தத்தில் தனது வேனை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது தனது வேனை காணவில்லை. வேன் காணாமல் போனது சம்மந்தமாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, கண்டோன்மெண்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் & காவல் ஆளிநர்கள் விசாரணை மேற்கொண்டு .
திண்டிவனம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் நின்று கொண்டிருந்த காணாமல் போன வேனை கைப்பற்றி, அதைத் திருடிச்சென்ற கள்ளக்குறிச்சி செந்தில் விஜயரங்கன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி திருட்டு வழக்கில் துரிதமாக புலன்விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, திருடுபோன வேனை மீட்டு சிறப்பாக பணியாற்றிய கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.