திண்டுக்கல்: 12.03.2022 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உட்கோட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11.03.2022 அன்று பாலசுப்பிரமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் வேடசந்தூர் காவல் நிலைய போலீசார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா