தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் பல வருடங்களாக, தேடப்படும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை, உடனே கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் படி தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார் , சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் தலைமை காவலர்கள் உமாசங்கர் , ராஜேஷ் மற்றும் திரு. காவலர்கள் திரு,. அருள்மொழிவர்மன், திரு.நவீன், திரு. அழகு சுந்தரம், திரு. சுஜித், ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் துறையினர், தீவிர வாகன சோதனை, மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தனிப்படை காவல் துறையினருக்கு, பல குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட, சுமார் ஐந்து வருடங்களாக காவல் துறையினருக்கு, டிமிக்கி தந்து தலைமறைவாக , இருந்து வரும் பிரபல ரவுடி சடையன், கால் செல்வகுமார், மதுரை மாவட்டம், கடச்சநேந்தல் எனும் பகுதியில் ஒரு வீட்டில் , பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் , மதுரைக்கு விரைந்து சென்று அம்மாவட்டத்தில் , பதுங்கி இருந்த தஞ்சை , திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த, பல வழக்குகளில், தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான, திருவாரூர் மாவாட்டம் முனியூர், பகுதியை சேர்ந்த முருகையன் மகன் செல்வகுமார் (37), என்கின்ற சடையன் கால் செல்வகுமாரை தஞ்சை தனிப்படை காவல் துறையினர் , துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அதன் பின்னர் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவனிடம் , தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்