மதுரை: தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி சரூபா உடன் காரில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு செல்ல வழி கேட்டு, கூத்தியார்குண்டு என்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தி அருகிலிருந்த நபர்களிடம் வழி கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது, இதனை கண்ட வெங்கடேசன் காரை விட்டு இறங்கி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார்.
மேலும் காரின் உட்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதால் காரின் கதவை திறக்க முடியாமல் சரூபாஅலறி உள்ளார். அப்பொழுது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து தலைமை காவலர் திரு ஜெயராமன் அவர்கள், தன் உயிரை துச்சமென நினைத்து கொழுந்துவிட்டு எரிந்த காரில் இருந்த சரூபா என்ற பெண்ணை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதற்கிடையில் காரில் ஏற்பட்ட தீ முழுவதும் பரவி எரிய ஆரம்பித்தது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர நிகழ்வில் தன் உயிரை பொருட்படுத்தாமல் காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட தலைமை காவலர் திரு ஜெயராமன் அவர்களுக்கு கணவன் மனைவி இருவரும் மனதார நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை