காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காரணித்தாங்கல் அருகே தனியார் கம்பெனியில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லூட்புர் ரகுமான் ( 22 ) த/பெ.இக்பால் கமல்பூர் உறராராய் என்பவர் இன்று ( 17.04.2022 ) காலை சுமார் 08.30 மணியளவில் பணிமுடித்து நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருநபர்கள் தாங்கள் போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவரை கஞ்சா வைத்திருப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்று பின்னர் அவரிடமிருந்து Google pay – மூலமாக எதிரியின் வங்கி கணக்கிற்கு ரூ.5000 / பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக லூட்புர் ரகுமான் அளித்த புகாரின் பேரில் ஒரகடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதுசம்மந்தமாக எதிரிகளை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில், அவர்களின் மேற்பார்வையில். திரு.பரந்தாமன், ஆய்வாளர்சுஙகுவார்சத்திரம் காவல்நிலையம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமை க்க ப்ப ட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு நபர்களான 1 ) சதீஷ்குமார் ( 32 தெ/பெ.சிவகுமார், நெ.226, அம்பேத்கர் தெரு, காரணிதாங்கல், வஞ்சுவாஞ்சேரி 2 ) சரவணன் ( 45 ) த / பெ.நடராஜன், நெ.6 / 120 இந்திரா தெரு,
வஞ்சுவாஞ்சேரி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். பின்னர் எதிரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் புகார் பெறப்பட்ட சிலமணி நேரத்திலேயே எதிரிகளை கைதுசெய்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்