மதுரை : பீ.பீ.குளத்தில் கத்தி முனையில் வழிப்பறி 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது மதுரை ஏப்ரல் 11 பீ.பீ.குளத்தில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பீபிகுளம் இந்திரா நகர் முதல் தெரு சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51. இவர் அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது 4 பேர் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் இரண்டாயிரத்தை வழிப்பறி செய்து விட்டனர் .இந்த சம்பவம் குறித்து பாலகிருஷ்ணன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் தெரிந்தது .அவர்கள் பனங்காடி குளத்தைச் சேர்ந்த நீலா சந்திரன் மகன் பார்த்தசாரதி 19, பீ.பீ.குளம் பர்மா நகர் பழனிவேல் மகன் பூபதி ராகவேந்திரன்.
19, இவர் பிரபல ரவுடி ஆவார். கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காந்தி மகன் நாகராஜ் என்ற சினேக் நாகராஜ் 27இவரும் ரவுடி ஆவார், நரிமேடு மருதுபாண்டியர் நகர் மலைச்சாமி மகன் சூர்யா என்ற நரேஷ் 25 ஆகிய 4 பேர் ஆவார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரத்தில் முன்விரோதத்தில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் 3 பேர் கைது. மதுரை ஏப்ரல் 11 ஜெய்ஹிந்த்புரத்தில் முன்விரோதத்தில் வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன்.
இவரது மகன் சச்சின் ரமேஷ் .இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அய்யப்பன் 21 என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் சச்சின் ரமேஷை வழிமறித்த பாண்டியன் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஐயப்பன், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் வீரபாண்டி 24, கண்ணன் மகன்இளமாறன் 21 ஆகிய மூவரும் வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து சச்சின்ரமைஷின தந்தை தங்கபாண்டியன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பன், வீரபாண்டி, இளமாறன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மதுரையில் வாகனம் மோதி காயத்துடன் திரிந்த மனநலம் பாதிக்க பட்ட பெண்ணை மீட்ட சட்ட கல்லூரி மாணவிகள். மதுரை. ஏப்.11 மதுரை அரசு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவிகள் ராஜாசெல்வி,புனிதா, நாகேஸ்வரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சட்ட சமரச தினம் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினர்.. அவர்கள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் மனநலன் பாதிக்க பட்ட ஒரு இளம்பெண் கிழிந்த மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடையுடன் மயங்கிக்கிடந்ததை கண்டனர். அவர்கள் சட்ட உதவி மைய வழக்கறிஞர் முத்துக்குமாருடன் அவரது முயற்சியின் பேரில் மாவட்ட சமூக நல துறையின் ஒன் ஸ்டாப் சென்டர் ஒருங்கிணைப்பாளர்.
பிரேமலதா, ரெட் கிராஸ் பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர். ராஜ்குமார், உறுப்பினர். ராஜு ஆகியோர் அந்த பெண்ணை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த தேவி என்றும் திருமணமான இரண்டு வருடங்களில் மனநிலை பாதிக்க பட்டு விட்டதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிய வந்தது. உடனே அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு முதலுதவி ஏற்பாடு செய்து, உணவளித்து சிகிச்சைக்காக தனியார் மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி