கோவை : கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.இந்த நிலையில் சுங்கத்துக்கும்-,ஆல் இந்தியா ரேடியோ நிலையத்துக்கும், இடைப்பட்ட பகுதியில் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் பல இடங்களில் மலைத் தேனீக்கள் பெரிய அளவில் கூடுகள் கட்டி இருந்தது.இந்த தேனீக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தியது.
அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் வீடுகளுக்கும், ரோடு ஓரத்தில் உள்ள கடைகளுக்கும் | குடியிருப்புகளுக்கும்கூட்டம் கூட்டமாக சென்று தொல்லை கொடுத்துவந்தது. இதனால் மேம்பாலத்துக்கு அருகில் குழந்தைகளுடன்வசிக்கும் மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர் . இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும்,மாநகராட்சி ஆணையாளருக்கும், தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரிஅண்ணாதுரை உத்தரவின்பேரில் கோவை தெற்கு பகுதி நிலைய தீயணைப்பு அதிகாரி வேலுசாமி தலைமையில்தீயணைப்பு படையினர் நேற்று நள்ளிரவில் கவச உடை அணிந்து பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தி வந்த தேன் கூடுகளை அப்புறப்படுத்தினார்கள்.அந்தப் பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.. தீயணைப்பு படையினருக்கும், தினத்தந்தி செய்தி நிறுவனத்துக்கும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.