சென்னை : சென்னை மணலி, செல்வ விநாயகர், கோவில் தெருவைச் சேர்ந்த சக்கரபாணி, (65), திருவொற்றியூர் 7வது வார்டு பகுதி, தி.மு.க., பிரதிநிதி. கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சக்கரபாணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிவிட்டு, மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி, காவல் துறையினர், வழக்கு பதிந்து, சைபர் கிரைம் காவல் துறையினர், உதவியுடன், சக்கரபாணியின், மொபைல்போன் டவரை வைத்து, ராயபுரம் 3வது தெரு கிரேஸ், கார்டனில் விசாரித்தனர்.
மேலும், அப்பகுதியில் சோதனையிட்டு, சந்தேகத்திற்கிடமாக, இருந்த சாக்கு மூட்டையை கண்டறிந்தனர். அதில், சக்கரபாணி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து, ராயபுரம் காவல் துறையினர், விசாரித்தனர். அதில், சக்கரபாணி, மணலிபுதுநகரில் இருந்த போது, தமீம் பானு, என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் தமீம் பானு, ராயபுரம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில், வாடகைக்கு வந்துள்ளார்.
இங்கு வந்து, தமீம் பானுவுடன் சக்கரபாணி, நெருக்கமாக இருந்ததை, தமீம் பானுவின் மைத்துனன் வாசீம்பாஷா பார்த்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வாசீம்பாஷா, சக்கரபாணியை கொலை செய்துள்ளார். இதையடுத்து, வாசீம்பாஷா, தமீம் பானு, டில்லிபாபு, என்ற ஆட்டோ ஓட்டுநர், ஆகியோர் சேர்ந்து, சாக்குப்பையில் உடலை கட்டி வீசியது தெரிந்தது. இதையடுத்து, ராயபுரத்தைச் சேர்ந்த வாசீம்பாஷா, (35), தமீம் பானு, (40), ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை,தேடி வருகின்றனர்.