கரூர் : கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதி யை சேர்ந்தவர் இளங்கோ, (45), நஞ்சை புகழூர் பஞ்சாயத்து, 7 வார்டு தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இளங்கோ, மொபைல் போனில், ‘என் சாவுக்கு புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், தாய் மாமன்கள் வீரமணி, சின்னசாமி, கருணாநிதி ஆகியோர்தான் காரணம்’ என கூறி, வீடியோவில் பதிவு செய்து பலருக்கு, அனுப்பி விட்டு, தன் மீது மண்ணெண்ணெய், ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அருகில் இருந்தவர்கள், இளங்கோவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, சேர்த்தனர். நேற்று காலை, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, இளங்கோ வுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அப்போது, இளங்கோ மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘இது என் குடும்ப பிரச்சனை. அதில், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரனுக்கு, சம்பந்தம் இல்லை’ என, கூறியுள்ளார். இளங்கோ வெளியிட்ட இரண்டு வீடியோக்களால், புகழூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான குணசேகரன் கூறுகையில், ” இளங்கோவுக்கும், அவரது தாய்மாமன் களுக்கும், நிலம் தொடர்பாக பிரச்சனை உள்ளது. அவரது தாய் மாமன் கருணாநிதி கேட்டு கொண்டதால், இளங்கோவிடம் மொபைல் போனில், சமாதானமாக போகும், படி தெரிவித்தேன். இது பற்றி பேச இளங்கோவை நேரில் வருமாறு அழைத்தேன்.
அவரும், வருவதாக ஓப்புக்கொண்டார். ஆனால், என் பெயரை யும் வீடியோவில் சொல்லிவிட்டு, தீக்குளித்துள்ளார். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இளங்கோவை மிரட்ட வில்லை. என் மீது எந்த தவறும் இல்லை என, இளங்கோ மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்,” என்றார். பா.ஜ., கண்டனம் தி.மு.க., வை சேர்ந்த புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், உள்ளிட்ட பலர் மிரட்டியதால், புஞ்சை புகழூர் தி.மு.க., கிளை செயலாளர் இளங்கோ தற்கொலைக்கு, முயன்றுள்ளார். எனவே, இளங்கோவிடம் காவல் துறையினர், வாக்குமூலம் பெற்று, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரனை, கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தை வன்மையாக, கண்டிக்கிறோம் என, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், நாதன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இத குறித்து காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.