திருவள்ளூர் : இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி நினைவு கூருவது நமது கடமையாகும்.
திருவள்ளூரில் காவலர் வீர வணக்க நாள் அஞ்சலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கூடுதல் கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் பலப் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், செப்டம்பர் 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரை உள்ள காலங்களில் தமிழகம் முழுவதும் பணியில் இருந்த போது வீரமரணம் அடைந்த 414 காவலருக்கு வீரவணக்க நாள் மரியாதை செலுத்தப்பட்டது.