திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின், நிலையத்தில் பணிபுரிபவர் அரிகிருஷ்ணன் (40), இவரின் மனைவி பெயர் மாலதி, இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, வடசென்னை அனல்மின் நிலையத்தில், கடந்த மூன்று வருடங்களாக உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். அவர் இங்குள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில், தங்கி பணிக்குச் செல்வது வழக்கம். இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை, அவர் பணிக்கு வந்துள்ளார். அன்றுதொட்டு இரண்டு தினங்களுக்கு, முன்னால் வரை மனைவியிடம் தொலைபேசியில், தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் இரண்டு தினங்களுக்கு, முன்னால் அவரிடத்தில் இருந்து எந்தவித தொலைபேசி, அழைப்பும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் கம்பெனியில் விசாரணை செய்துள்ளனர்.
அதற்கு அங்குள்ளவர்கள் அவரின் பை, மற்றும் பைக், இங்குதான் உள்ளது மேலும் அவரின் பையில் பரிசோதனை செய்த போது அதில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அந்த கடிதத்தில் அவர் மிகுந்த மன உளைச்சலில், இருப்பதாகும் கூறப்பட்டு இருந்ததாக கம்பெனி அலுவலர்கள் கூறினார்கள். ஆனால் இதை ஏற்க மறுத்த குடும்பத்தார், ஒன்று திரண்டு வந்து இன்று கம்பெனியின் முன்பு தர்ணா செய்தனர் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அலுவலர்கள் அவர்களின் உறவினர்கள் இரண்டு பேரை கூட்டிக் கொண்டு, கம்பெனி உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கம்பெனியில் ஒரு பகுதியில், அவர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தார், இது குறித்து சரியான விசாரணை செய்ய வேண்டும். என்றும் எங்கள் மகனுக்கு இங்கு உள்ள ஒரு அலுவலர், மிகுந்த மன உளைச்சலை தந்துள்ளார். அதன் காரணமாகத்தான் அவர் உயிர் இழந்திருக்க கூடும். என்று அவர்கள் சந்தேகப்படுகின்றனர், இதற்கிடையே இறந்த ஹரி கிருஷ்ணனுக்கு, வீட்டிலோ அல்லது வெளியிலோ, எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும். இது முழுக்க முழுக்க அவரின், மேல் பணி செய்யும் ஊழியர்களின் மன உளைச்சலால் தான், இந்த நிலைமைக்கு அரிகிருஷ்ணன் தள்ளப்பட்டார். என்று அவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறை புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்