திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 8-வது வார்டில், பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. 8-வது வார்டு கவுன்சிலர் திருமதி . குமாரி புகழேந்தி ஏற்பாட்டில், சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் திருமதி .ருக்மணி மோகன்ராஜ், கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதற்கு முன்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நட்டனர்.
பள்ளி மாணவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக சென்றனர். பின்பு வீடு வீடாக சென்று துண்டு பிரச்சாரம் மற்றும் மஞ்சள் பை கொடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு துணை தலைவர் திரு. அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் திரு. நக்கீரன், திரு. ரஜினி, திருமதி . ஜெயலட்சுமி தன்ராஜ் ,திருமதி . கவிதா சங்கர், திருமதி . சங்கீதாசேகர், திரு. துரைவேல்பாண்டியன், திரு. ராஜன், திரு. அபு பக்கர், மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு