நாமக்கல் : எலச்சிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் திருமணிமுத்தாற்றில், நேற்று (50), வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் எலச்சிபாளையம் காவல் துறைக்கு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் , விரைந்து சென்று விசாரித்தனர். ஆனால் பிணமாக கிடந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து காவல் துறையினர் அவரது பிணத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.