திருநெல்வேலி மாவட்டம்: பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தங்குளம் அருகே உள்ள குளத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பதாக வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் திரு ஹரிகிரன் பிரசாத் IPS அவர்களுக்கு மறைமுகமாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பழவூர் போலீசாரை மாறுவேடத்தில் சென்று மது பாட்டில் விற்பனை செய்தவரை பிடிக்க உத்தரவிட்டார். பின்பு முதல்நிலை காவலர் 2846 திரு ஆறுமுக பெருமாள் மற்றும் இரண்டாம்நிலை காவலர் 1730 வின்ஸ் லின்பிரபு இருவரும் அருகில் உள்ள குளத்திற்கு மாறுவேடத்தில் சென்று மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்பு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து உதவி ஆய்வாளர் திரு அருண்ராஜா அவர்கள் u/s 4(1)(i) TNP ACTபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றவாளியை பிடிக்க உதவிய காவலர்களை வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஹரிகிரன் பிரசாத் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.